அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பாராளுமன்ற தேர்தல் வரும்: சுப்பிரமணியன் சுவாமி

Siva

திங்கள், 10 ஜூன் 2024 (17:57 IST)
தற்போதைய மத்திய அரசு ஓராண்டு கூட தாக்கு பிடிக்காது என்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பாராளுமன்ற தேர்தல் வரும் என்றும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனி பெரும்பான்மை பெறவில்லை என்பதை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்து ஆட்சி செய்து வருகின்றன. குறிப்பாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதீஷ் குமாரின் பிஜு ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகள் ஆட்சியின் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி இன்று அளித்த பேட்டியில் இந்த ஆட்சி ஒரு வருடம் கூட தேறாது என்றும் பதவி ஆசை உள்ளவர்களால் இந்த ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஒரே ஆண்டில் இந்த ஆட்சி கவிழ்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பாராளுமன்ற தேர்தல் வரும் என்றும் கூறினார்.

பாஜகவினர் 300 தொகுதி, 400 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று கூறிய  நிலையில் நான் தான் சரியாக 220 முதல் 240 தொகுதி தான் வரும் என்று கூறினேன் என்றும் அதன்படி தான் ரிசல்ட் வந்திருக்கிறது என்றும் அதே போல் அடுத்த ஆண்டு தேர்தல் வரும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்