இதுதான் பிரசாந்த் கிஷோரால் ஏற்பட்ட மாற்றமா?

ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (15:30 IST)
திமுக என்றாலே திகவின் கொள்கைகளை பின்பற்றி வரும் கட்சிதான் என்பது அனைவரும் தெரிந்ததே. ’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டாலும் அவ்வப்போது இந்து மதத்தை மட்டும் அவமதிக்கும் செயல்களை திமுக தலைவர்கள் தொடர்ந்து செய்து வருவதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட பல திமுக தலைவர்கள் இந்து மதத்தை குறித்து கொச்சைப்படுத்தி பேசிய வரலாறு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று தைப்பூசத் திருநாளையொட்டி நடந்த விஷயம் குறித்து திமுக பிரமுகர் டிஆர்பி ராஜா அவர்கள் தனது டுவிட்டரில் ’தைப்பூசம் என்றாலே முதலில் அப்பன் முருகன், அடுத்தது இந்த காவடி ஆட்டம் என்று குறிப்பிட்டு தைப்பூசத்தன்று பக்தர்கள் காவடி ஆட்டம் ஆடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ குறித்து பலர் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் 
 
நேற்றுவரை இந்து மதத்தை தாக்கி வந்த திமுக இன்று திடீரென இந்து மதத்தின் விசேஷத்தை, சிறப்பினை கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் இந்த மாற்றத்திற்கு பிரசாந்த் கிஷோர் தான் காரணமாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்களிடம் குறிப்பாக இந்து மக்களிடம் நம்பிக்கையை பெற வேண்டுமானால் இந்து மதத்தை அவதூறாக பேசுவதை நிறுத்த வேண்டும் என்று பிரசாத் கிஷோர் அறிவுரை கூறி இருக்கலாம் என்றும் அதன்படி திமுகவினர் நடந்து வருவதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை அளித்து வருகின்றனர். மொத்தத்தில் திமுகவின் கொள்கையில் தலையிட ஆரம்பித்து விட்டார் பிரசாந்த் கிஷோர் என்பதுதான் தெரியவருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்