கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம் காணியாளம்பட்டி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 2017 - 2018, 2018 - 2019 ஆகிய ஆண்டுகளில் படித்த 203 மாணவ - மாணவிகளுக்கு 25 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகளை போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தமிழகம் இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக உள்ளது. மாணவ மாணவிகளின் கல்விக்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு பல திட்டங்களை கொண்டுவந்துள்ளது கடந்த ஒன்பது ஆண்டுகளாக மடிக்கணினி வழங்கி வருகிறது.
அதி நவீன தொழில்நுட்ப மருத்துவக் கருவிகள் கொண்ட மருத்துவமனையாக கரூர் மருத்துவமனை விளங்கிவருகிறது. இதை சட்டமன்ற ஆய்வுக் குழுவில் வந்திருந்த சட்டமன்ற எதிர்க் கட்சியினர் கூட பாராட்டி உள்ளனர். இன்ஜினியரிங் படிப்பை விட தொழில்நுட்ப படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது எனவே இதை பயன்படுத்தி மாணவர்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.