கோயம்பேடு மற்றும் தாம்பரம் பகுதிகளில் மீண்டும் போக்குவரத்து சேவை தொடக்கம்!

செவ்வாய், 5 டிசம்பர் 2023 (07:52 IST)
கோபு படம்

நேற்று முழுவதும் சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் சென்னை முழுவதும் வெள்ள நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. அவற்றை அகற்றும் பணிகள் நடந்து வந்தன.

இந்நிலையில் நேற்றிரவு முதல் மழை குறைந்துள்ளதால் மேடான் பகுதிகளான கோயம்பேடு, அண்ணா நகர், மவுண்ட் ரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளது. இதையடுத்து இப்போது அந்த பகுதிகளில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதே போல வெள்ள நீர் வடிந்த பல பகுதிகளில் போக்குவரத்து திரும்ப தொடங்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்