இன்று முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் ரத்து: எத்தனை நாட்களுக்கு?

புதன், 29 நவம்பர் 2023 (08:09 IST)
இன்று முதல் சென்னை கடற்கரை  மற்றும் தாம்பரம் இடையே செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
சென்னையின் முக்கிய போக்குவரத்தாக விளங்கி வரும் மின்சார ரயில் தான் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர் . ஆனால் அதே நேரத்தில் மின்சார ரயில் போக்குவரத்து அவ்வப்போது பராமரிப்பு காரணமாக சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை சென்னை கடற்கரை தாம்பரம் இடையே செல்லும்  ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
 
பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறு மார்க்கமாக தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்