உள்ளாட்சி தேர்தலில் திருநங்கை ரியா வெற்றி... திமுகவினர் மகிழ்ச்சி !

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (14:19 IST)
உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று பல்வேறு குழப்பங்களுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்று முன் வெளியான முன்னிலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவி தேர்தலில் 4 இடங்களில் திமுக முன்னிலையில் இருப்பதாகவும், 2 இடங்களில் அதிமுக முன்னிலையில் இருப்பதாகவும் தகவல்
 
ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 2 இடங்களிலும் அதிமுக 1 இடத்திலும் முன்னிலை!
 
திருச்செங்கோடு ஒன்றியத்தில் 118 தபால் வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு. மேலும் தருமபுரி ஏரியூர் ஒன்றியத்தில் 135 வாக்குகளில் 85 வாக்குகள் செல்லாதவை என்றும், சிவகங்கை திருப்புவனம் ஒன்றியத்தில் 60 வாக்குகளில் 58 வாக்குகள் செல்லாதவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்நிலையில் திருச்சங்கோடு ஒன்றிய கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார்.
 
சாத்தான்குளம் ஒன்றியம் 5-வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஜெயபதி வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல் திருவாரூரில்   நன்னிலம் ஒன்றியம் 1-வது வார்டில் அதிமுக வேட்பாளர் அன்பழகன் வெற்றி பெற்றுள்ளார். திருவிடைமருதூர் ஒன்றியம் 1-வது வார்டில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்