நாகப்பட்டிணத்தில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆதாரமற்ற தகவல்களை பேசியதாக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார்.
நேற்று நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்களிடையே பிரச்சாரம் செய்தார். அப்போது நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டங்களில் மக்களுக்கு தேவையான பல திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என அவர் பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் போக்கு குறித்து நாகப்பட்டிணம் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “அண்ணாமலை, ஆளுநர் ரவியை தொடர்ந்து அவதூறான இட்டுக்கட்டிய பொய்களை, வாய்க்கு வந்ததை விஜய் பேசத் தொடங்கியுள்ளார். நாகப்பட்டினத்தில் முழுக்க முழுக்க பொய் தகவல்களை பரப்பிவிட்டுச் சென்றுள்ளார். பொய்யைச் சொல்லி கவனத்தை ஈர்க்கும் பாஜகவின் அணுகுமுறையை கையில் எடுத்துள்ளார் விஜய்.
படத்திற்கு 6 மாதம் கால்ஷீட் கொடுப்பது போல, அரசியலுக்கு தற்போது 6 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய். அவரது அரசியல் தமிழ்நாட்டு அரசியலுக்கு உகந்தது அல்ல” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K