மே 5 ஆம் தேதி வணிகர் தினம் - கடைகள் விடுமுறை

Webdunia
வியாழன், 5 மே 2016 (02:27 IST)
மே 5 ஆம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 33 ஆவது வணிகர் தினவிழா மாநில மாநாடு, அச்சிறுப்பாக்கத்தில் மே 5 ஆம் தேதி அதன் தலைவர் த.வெள்ளையன் தலைமையில் நடைபெறுகிறது. 
 
இந்த மாநாட்டில், உலக வர்த்தக ஒப்பந்த எதிர்ப்பு- சில்லரை வணிகப் பாதுகாப்பு மாநில மாநாடு என்ற தலைப்பில் நிகழ்சியும் நடைபெறுகிறது.  இந்த நிலையில், வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்