பாம்பன் கடற்கரை, தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: மாவட்ட நிர்வாகம்..!

வெள்ளி, 1 டிசம்பர் 2023 (08:02 IST)
வங்கக் கடலில் புயல் சின்னம் தோன்றியுள்ளதை அடுத்து பாம்பன் கடற்கரை மற்றும் தனுஷ்கோடி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் தோன்றியுள்ள புயல் சின்னம் டிசம்பர் மூன்றாம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் சூறைக் காற்று வீச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புயல் சின்னம் காரணமாக பாம்பன் கடற்கரை மற்றும் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும் எனவே அந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எட்டாவது நாளாக கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்