உதகையில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்: சுற்றுலா பயணிகள் அதிருப்தி!

சனி, 2 ஏப்ரல் 2022 (12:05 IST)
உதகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சுற்றுலா வாகன ஓட்டிகள், வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.      

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய விலை உயர்த்தப்பட்ட்ய்ள்ளது பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து தற்போது ரூ. 108.21 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து தற்போது ரூ.98.21 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
ஆனால், உதகையில் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.99.39 பைசாவுக்கு விற்ற நிலையில் இன்று 75 பைசா உயர்ந்து டீசல் ரூ.100.15 பைசாவாக விற்பனையாகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 பைசா உயர்ந்து தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.41 பைசாவுக்கு விற்பனையாகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்