பள்ளிகள் திறப்பு நாளில் மாணவர்களுக்கு இனிப்பு..! எதற்காக தெரியுமா..?

Senthil Velan

சனி, 8 ஜூன் 2024 (13:23 IST)
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான ஜூன் 10ம் தேதி அன்று அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக சமூக நல ஆணையர் வெளியிட்டுள்ள செய்தியில்,  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கவும், குழந்தைகள் மையங்கள் / சத்துணவு மையங்களில் பயனடைந்துவரும் குழந்தைகளுக்கு நாள்தோறும் சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் அரிசி பயன்படுத்தவும்.

இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் வெல்லம் மற்றும் இதரபொருட்களை சத்துணவு அமைப்பாளர்கள் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் நாளின் உணவூட்டுச் செலவினத்திற்குள் (எரிபொருள் நீங்கலாக) வாங்குவதற்கு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டது.
 
ஜுன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கப்பட வேண்டிய இனிப்பு பொங்கல், கோடை விடுமுறை முடிந்தும் பள்ளிகள் துவங்கப்படாததால், விடுமுறை முடிந்து பள்ளி துவங்கப்படும் முதல் நாள் 10.06.2024 அன்று இனிப்பு பொங்கல் அனைத்து பள்ளிகளிலும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளும் படி கூடுதல் கல்வி அலுவலர், பள்ளி கல்வித்துறை சென்னை பெருநகர மாநராட்சி மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்