தமிழகத்தின் 14 மாவட்டங்களில் நாளை கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (15:02 IST)
தமிழகத்தில் இன்று சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நாளை 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்து வருகிறது.
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை 14 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் கரூர், "திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்