அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

திங்கள், 24 ஏப்ரல் 2023 (07:36 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
 கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கடுமையான வெயில் அடித்து வருகிறது என்று பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று திடீரென தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழை பெய்தது என்றும் சுமார் 25 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் இன்று ஐந்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் திருத்தணியில் 3 செ.மீ, திருவாலங்காடு, பள்ளிபட்டு, செங்குன்றம், சோழவரத்தில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்