ஓணம் பண்டிகையொட்டி சென்னையில் நாளை உள்ளூர் விடுமுறை

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (17:22 IST)
சென்னை மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 29.08.2023 தேதி செவ்வாய்கிழமை அரசு ஆணைப்படி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல்  செப்டம்பர் 8 ஆம் தேதிவரை 10  நாட்கள் ஓணம் பண்டிகை எனும் திருவோண திருநாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓணம் நாளில், மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வந்து மக்களை காண வருவதாகவும், அவர் ஒரு வீட்டிற்குச் செல்வதாக கேரள மக்கள் இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில், ஓணம் பண்டிகையொட்டி  சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 29.08.2023 தேதி செவ்வாய்கிழமை அரசு ஆணைப்படி உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளுர் விடுமுறைக்கு பதில் 02.09.2023 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.

ஆயினும் உள்ளூர் விடுமுறை நாளான 29.08.2023 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ,ப., அவர்கள் அறிவித்துள்ளார். இவ்வறிவிக்கை www.chennai.tn.nic.in என்ற இணையதள முகவரியில் உள்ளது எனவும் அறிவிக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்