தமிழ்நாட்டில் நாளை பேருந்து இயங்குமா? தொ.மு.ச பொருளாளர் நடராஜன் தகவல்!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (14:04 IST)
தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் 60 சதவிகித இயங்கும் என தொ.மு.ச பொருளாளர் நடராஜன் அறிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் இன்றும் நாளையும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றன என்பதை பார்த்தோம் 
 
இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயங்கவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தொ.மு.ச செயலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார் 
 
நாளை தமிழ்நாட்டில் போராட்டம் தொடர்ந்தாலும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போராட்ட வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மக்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து தமிழ்நாட்டில் நாளை பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்