விலை குறைந்த தக்காளி; மக்கள் நிம்மதி பெருமூச்சு! – இன்றைய விலை நிலவரம்!

வியாழன், 13 ஜூலை 2023 (09:34 IST)
தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில் இன்று சற்று விலை குறைந்துள்ளது.



வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்திற்கு தக்காளில் இறக்குமதி குறைந்துள்ள நிலையில் பல பகுதிகளிலும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் கிலோ ரூ.20 வரை விற்று வந்த தக்காளி தற்போது மெல்ல மெல்ல விலை உயர்ந்து ரூ.130ஐ எட்டியது. இதனால் மக்கள் பலரும் தக்காளி வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தக்காளில் தட்டுப்பாட்டை தடுக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதுடன், பசுமைப் பண்ணைகள், ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்து வருகின்றன.

நேற்று கிலோ ரூ.130 ஆக விற்பனை ஆகி வந்த தக்காளில் இன்று ரூ.20 குறைந்து கிலோ ரூ.110 க்கு விற்பனையாகி வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் இன்னும் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தக்காளி சற்று விலை குறைந்திருப்பது மக்களை நிம்மதியடைய செய்துள்ளது.

Edit by Prasanth.K
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்