கடந்த சில வாரங்களாக தக்காளி விலை உச்சமடைந்திருந்த நிலையில் தற்போது அதன் விலை குறைந்துள்ளது.
வடமாநிலங்களில் பெய்த கனமழையால் தக்காளி வரத்து குறைந்த நிலையில் தக்காளி விலை அதிகரித்தது. கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனையானதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் தற்போது தக்காளி விலை மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.90 வரை குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கிலோ ரூ.70க்கு விற்று வந்த தக்காளி இன்று மேலும் ரூ.10 குறைந்து கிலோ ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது. தக்காளி விலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.