ரேஷன் பொருட்களைப் பெற டோக்கன் விநியோகம் !

திங்கள், 31 மே 2021 (21:44 IST)
ஜூன் மாதம் ரேஷன் பொருட்களைப் பெற டோக்கன் விநியோகிக்க உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  தமிழக அரசு கொரொனா நிதியாக தமிழக முதல்வர் அறிவித்தபடி 4 ஆட்யிரம், ரூபாய் கொரொனா நிதியில் ரூ.2000 வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 வது தவணதைத் தொகை  வழங்குவதற்கான ஆலோசனையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியானது. அதேபோல் ரேசன் கடைகளில் 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவதாகத் தகவல் வெளியானது.

எனவே ஜூன் மாதம் ரேஷன் பொருட்களைப் பெற டோக்கன் விநியோகிக்க உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் நாளை முதல் 4 நாட்களுக்கு வீடுகளுக்குச் சென்று டோக்கம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.  குறிப்பாக நியாய விலைக்கடை ஊழியர்களே ரேசன் அட்டைதாரர்களுக்கு நேரில் சென்று டோக்கன் வழங்குவார்கள், ஜூன் மாதம் 5 ஆம் தேதி முதல் டோக்கன் படி பெற்றுக்கொள்ளலாம்  எனக் கூறப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்