ஆ.ராசாவின் மனைவி காலமானார் ! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சனி, 29 மே 2021 (20:11 IST)
திமுக துணைப்பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான ஆ.,ராசவின் மனைவி காலாமானார்.

நீலகிரி மாவட்ட எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி( 53) சில மாதங்களாகவே புற்றுநோயால் அவசதிப்பட்டு வந்த நிலையில்., இதற்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும்  தொண்டர்கள் பலரும் அஞ்சலி  செலுத்தி வருகின்றனர். இதுகுறித்து முதல்வர்  ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,. அம்மையாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்  தெரிவித்துக் கொள்கிறேன். ஆ.ராசா இத்துயரில் இருந்து மீண்டெழ கழகம் துணைபுரியும் எனத் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்