இன்று காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (07:00 IST)
2018-19ஆம் கல்வியாண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 19 வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மொத்தம் 7,082 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,87,992 மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதினர். இவர்களில் மாணவியர் 4,60,006 பேர், மாணவர்கள் 4,01,101 பேர் மற்றும்  மூன்றாம் பாலினத்தோர் இருவர் ஆவார்.
 
இந்த நிலையில் 12ஆம் வகுப்பு பொதுதேர்வின் முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடவிருப்பதாக தேர்வுத்துறை உறுதி செய்துள்ளது. இந்த தேர்வின் முடிவுகளை மாணவர்கள் கீழ்க்கண்ட இணையதளங்களில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
http://www.tnresults.nic.in  
 
http://www.dge1.tn.nic.in  
 
http://www.dge2.tn.nic.in   
 

மேலும் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் ஜூன் 3 முதல் 10 வரை மறுதேர்வு நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தோல்வி அடைந்த மாணவர்கள் விபரீத முடிவை எடுக்காமல் இருக்கும் வகையில் கவுன்சிலிங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்