டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் 'அடுத்த ஓட்டு ரஜினிக்கே' ஹேஷ்டேக்!

வியாழன், 18 ஏப்ரல் 2019 (21:14 IST)
முதல்முறையாக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத தேர்தலை தமிழகம் இன்று சந்தித்துள்ளது. இந்த தேர்தலில் எந்த கட்சியிலும் ஆளுமை இல்லாத தலைமை இருப்பதால் நடுநிலை வாக்காளர்கள் பலர் யாருக்கு வாக்களிப்பது என்று கடைசி நிமிடம் வரை குழப்பம் அடைந்தனர். இந்த தேர்தலில் புதிதாக களம் கண்ட கமல்ஹாசனும் தினகரனும் கூட மக்களை பெருமளவில் கவரவில்லை
 
இந்த நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இன்றைய தேர்தல் நாளில் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே
#அடுத்த_ஓட்டு_தலைவருக்கே என இரண்டு ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகின்றன. ரஜினி ரசிகர்களும், டுவிட்டர் பயனாளிகளும் இந்த் ஹேஷ்டேக்குகளை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
 
ஒருவேளை 22 சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவில் திருப்பம் ஏற்பட்டு அதிமுக அரசு கவிழ்ந்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவும் வாய்ப்பு உள்ளதாகவும், எந்த நேரத்தில் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் கட்சி ஆரம்பித்து அந்த தேர்தலை சந்திக்க ரஜினிகாந்த் தயாராக இருப்பதாகவும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்