பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வா?

திங்கள், 4 அக்டோபர் 2021 (07:25 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது என்பதையும் பெட்ரோல் விலை சென்னை உள்பட தமிழகத்தில் 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதையும் பார்த்தோம்
 
அதேபோல் டீசல் விலையும் 95 ரூபாயை தாண்டி நூறு ரூபாயை நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 100.01  என்ற விலைக்கும் டீசல் விலை ரூபாய் 95.31 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்