எம்பிபிஎஸ் கலந்தாய்வில் தேர்வு பெற்றவர்களுக்கு இன்று கடைசி நாள்!

திங்கள், 7 நவம்பர் 2022 (11:52 IST)
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வில் தேர்வு பெற்றவர்கள் கல்லூரியில் சேர இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தேர்வு பெற்றவர்கள் நவம்பர் 7 ஆம் தேதியான இன்றுக்குள் கல்லூரியில் சேர கடைசி தினம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
முதல் சுற்று கலந்தாய்வில் தேர்வு பெற்றவர்கள் கல்லூரியில் சேர்ந்த பின்னரே பூர்த்தியான இடங்களைப் பொறுத்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு நடைபெற உள்ளது என்பதும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு இந்த வார இறுதியில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
முதல் சுற்று கலந்தாய்வில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு இடமும், 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 43 இடங்களும் நிரம்பவில்லை. இந்த 44  இடங்கள் மற்றும் முதல் சுற்றில் தேர்வு பெற்றவர்கள் கல்லூரியில் சேராதவர்களின் இடங்கள் ஆகியவை சேர்த்து இரண்டாம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்