இன்று கருப்பு நாளாக கடைபிடிப்போம்: திருமாவளவன் அறிக்கை

புதன், 26 மே 2021 (08:43 IST)
மே 26-ஆம் தேதியான இன்று கருப்பு நாளாக கடை பிடிப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் மே 26-ஆம் தேதி தான் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார். இந்த நிலையில் இந்த நாளை கறுப்பு தேசிய கருப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்
 
எல்லா தளங்களிலும் தோல்வி அடைந்து விட்ட மோடி அரசு, மக்கள் விரோத அரசு என்றும் அதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் மோடி பதவியேற்ற மே 26-ஆம் தேதியான இன்று விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று தேசிய கருப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
 
மோடி பதவியில் இருந்த இந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டதாகவும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு உள்ளதாகவும், பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையின் மூலமாக ஏழை எளிய மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளார்கள் என்றும், மழை வெள்ளம் வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களின் போது கூட மோடி அரசு உரிய விதத்தில் மக்களுக்கு உதவவில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

எல்லா தளங்களிலும் தோல்வி அடைந்து விட்ட மோடி அரசு, ஒரு மக்கள் விரோத அரசு. அதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் மோடி பதவியேற்ற மே-26 ஆம் நாளை, விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று 'தேசிய கறுப்பு நாளாகக்' கடைபிடிக்க வேண்டும்#NationalBlackDay pic.twitter.com/1X0ZHyEuaw

— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 25, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்