மோடி படமும் வேண்டாம்… முதல்வர் படமும் வேண்டாம்… எஸ் ஆர் பிரபு கோபம்!

திங்கள், 24 மே 2021 (08:29 IST)
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் குறித்து ஆவேசமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதில் அரசு மருத்துவமனைகளில் போட்டுக்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் மோடி புகைப்படம் பொறித்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் மாநில அரசுகள் தங்கள் நிதியில் வாங்கும் தடுப்பூசிகளில் இனிமேல் மாநில முதல்வர்களின் படங்கள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சர்ச்சைகள் கடந்த சில நாட்களாக பரவி வருகின்றன.

இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ‘தடுப்பூசி யாருக்கு போடுறாங்களோ, அவங்க படத்த சான்றிதழ்ல போடுங்கப்பா. இன்னும் அதிக நம்பகத்தன்மையுடனாவது இருக்கும். மத்திய அரசோ, மாநில அரசோ,எல்லாம் மக்கள் பணத்துலதான ஊசி/மருந்து வாங்கறோம். #CovidIndia  #VaccineComedies ’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்