தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்... வானிலை மையம் எச்சரிக்கை..!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (15:43 IST)
தமிழகத்தில் இன்றும் நாளையும் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பல நகரங்களில் 100 டிகிரிக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருவதால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. 
 
இந்த நிலையில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்றும் நாளையும் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் உள்ள ஓரிரு இடங்களில் வரும் 21 ஆம் தேதி வரை லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்