ஈபிஎஸ் -க்காக தீச்சட்டி எடுக்க போறேன்: காமெடி நடிகர் அறிவிப்பு..!

செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (15:51 IST)
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்காக தீச்சட்டி எடுக்க போகிறேன் என பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது
 
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஆனதற்கும், அடுத்த முதல் அமைச்சராக ஆவதற்கும் நான் அக்னிசட்டி எடுக்கப்போறேன். கூடிய விரைவில் நேர்மையான நல்லாட்சி நடைபெற உள்ளது. 
 
எடப்பாடி பழனிசாமி இந்நேரம் ஆட்சியில் இருந்திருந்தால் கரண்ட் பில் அதிகரித்து இருக்காது. தற்போது அதிகரித்துள்ளது. வீட்டு வரியும் அதிகரித்துள்ளது. அவர் விரைவில் வருவார். அதிமுக பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்