டி.என்.பிஎஸ்.சி குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (18:15 IST)
தமிழகத்தில் குரூப் 4  தேர்வுகள் முடிந்து 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில்,  டிஎன்பிஎஸ்சி முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி, அரசுத்துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்சர் உள்ளிட்ட 11 வகைப் பணிகளுக்கு  7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, கடந்தாண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டன.இத்தேர்வில் 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

இத்தேர்வுகள் முடிந்து 8  மாதங்கள் ஆகும் நிலையில், இன்று குரூப் -4 தேர்வு  முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.

பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அப்போது வெளியாகவில்லை. இந்த நிலையில், அறிவித்தபடி  மார்ச்சில் இதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.

தேர்வர்கள் ttp:/ww.tnpsc.gov.in/  என்ற  இணைய முகவரியில் சென்று முடிவுகள் அறியலாம்.


https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்