7 ஆயிரம் பணியிடங்களுக்கு 21 லட்சம் விண்ணப்பம்! – டிஎன்பிஎஸ்சி தேர்வு விவரங்கள்!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (09:22 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் க்ரூப் 4 தேர்வுகளுக்கு மொத்தமாக 21.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் க்ரூப் 1, க்ரூப் 2, 2 ஏ மற்றும் க்ரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் பல லட்சம் பேர் இந்த தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

இந்த ஆண்டு க்ரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. க்ரூப் 4 தேர்வின் வழியாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்காக 21.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு 300 பேர் போட்டி என்ற விகிதத்தில் இது உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்