தமிழகத்தில் இன்று முதல் மின் கட்டணம் உயர்வு? – யாரெல்லாம் அதிகம் செலுத்த வேண்டும்?

சனி, 1 ஜூலை 2023 (08:55 IST)
தமிழ்நாடு மின்சார வாரியம் முன்னதாக அறிவித்தப்படி இன்று முதல் தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.



தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில் அனைத்து மின் இணைப்புகளையும் ஆதார் எண்ணோடு இணைத்தல் வேண்டும் என்று கட்டாயமாக்கியது. அதன்படி பல கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டன. இந்நிலையில் இதற்கு பிறகு மின் கட்டண உயர்வு இருக்கலாம் என கூறப்பட்டு வந்தது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின் வாரியம் தெரிவித்திருந்தது. ஆனால் வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஜூலை 1 முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் தமிழ்நாட்டில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்கிறது.

யூனிட் ஒன்றுக்கு 13 முதல் 21 காசுகள் வரை கட்டணம் உயர்கிறது. பைசா அளவில் கட்டணம் உயர்வதால் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் வராது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் விவசாய பயன்பாடு மற்றும் குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்