4 சக்கரத்துடன் சென்ற பேருந்து: போக்குவரத்து துறை விளக்கம்

திங்கள், 1 ஜூலை 2019 (21:04 IST)
நெட்டிசன்களுக்கு ஒரு புகைப்படமோ அல்லது வீடியோவோ கிடைத்துவிட்டால் போதும் உடனே பொங்கி எழுந்து கருத்தை தெரிவிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படித்தான் இன்று பொள்ளாச்சியில் பின்னால் இரண்டே இரண்டு சக்கரங்களுடன் ஒரு பேருந்து சென்றதை வீடியோ எடுத்த ஒரு நபர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்தார். உடனே திடீர் போராளிகள் பொங்கி எழுந்து, அரசு போக்குவரத்தின் லட்சணத்தை பார், பயணிகளின் பாதுகாப்பு என்ன ஆவது? என்று பொங்கி எழுந்தனர்.
 
இந்த நிலையில் இந்த பேருந்து குறித்து தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. பொள்ளாச்சியில் பின்புறம் 2 சக்கரங்களோடு அரசுப்பேருந்து இயங்கியதாக பரவும் செய்தியில் உண்மையில்லை என்றும், அந்த பேருந்து பொள்ளாச்சியிலிருந்து மேட்டுப்பாளையம் கழிவுப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பேருந்து என்றும், மேலும் அந்த பேருந்தில் பயணிகள் யாரும் பயணிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தனர்.
 
ஒரு செய்தியை உறுதி செய்யாமல் ஒருவர் செய்தி வெளியிட்டவுடன் அதனை கொஞ்சம் கண், காது, மூக்கை மட்டும் மாற்றி வெவ்வேறு இணையதளங்களில் செய்தி வெளிவருவதால் மக்களுக்கு தேவையில்லாத பீதி ஏற்படுவதாக சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்