ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகளின் அட்டவணை நேற்று வெளியானது. இதன்படி, 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் அறிவிப்பு ஆகஸ்ட் மாதமும், 1,205 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதமும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெட் தேர்வுக்கான அறிவிப்பு இந்த அட்டவணையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2025ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்வுகளின் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மொத்தம் 9 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் 4 தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை, புதியதாக 5 தேர்வுகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன.
1. 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு – ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியாகி, நவம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும்.
2. 1,205 பட்டதாரி ஆசிரியர் தேர்வு – செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வு நடைபெறும்.
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அதிகமாக எதிர்பார்த்த டெட் தேர்வுக்கான அறிவிப்பு அட்டவணையில் இடம் பெறவில்லை. இதன் மூலம், இந்த ஆண்டு டெட் தேர்வு நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிகிறது.