வெள்ளத்தில் டிராக்டர் ஓட்டும் அண்ணாமலை: வைரல் வீடியோ!

ஞாயிறு, 14 நவம்பர் 2021 (11:11 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வெள்ளத்தில் படகில் சென்ற காட்சியின் வீடியோ வைரல் ஆனது என்பதும் இந்த வீடியோவை வைத்து பலர் மீம்ஸ் கிரியேட் செய்து வந்தனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று அவர் வெள்ள நீரில் டிராக்டரின் செல்லும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிராக்டரை அண்ணாமலை ஓட்ட அதில் அவரது கட்சியின் தொண்டர்கள் உட்கார்ந்து இருக்கும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வீடியோவுக்கு அண்ணாமலை அவர்கள் முழு நேர அரசியல்வாதி ஆகி விட்டார் என்றும் ஒரு அரசியல்வாதிக்கு உள்ள அனைத்து தகுதிகளும் அவருக்கு வந்து விட்டது என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது
 
 

Blessed & humbled to be with our farmer friends!
Their love is unconditional.
They are with our PM Shri @narendramodi ji anytime, every time & always! pic.twitter.com/nwCfhvZBKb

— K.Annamalai (@annamalai_k) November 14, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்