7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: குடியரசுத்தலைவருக்கு தமிழக அரசு கடிதம்

வியாழன், 20 மே 2021 (18:50 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் கடந்த பல வருடங்களாக ஒலித்து வருகிறது
 
குறிப்பாக தமிழக அமைச்சரவை 7 தமிழர்களை விடுதலை செய்ய தீர்மானம் இயற்றி தமிழக கவர்னர் அனுப்பியது என்பதும் ஆனால் சமீபத்தில் கவர்னர் அந்த தீர்மானத்தை நிராகரித்தார் என்பதால் 7 தமிழர்களை விடுதலை கேள்விக்குறியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து ஏழு தமிழர்களின் விடுதலை சாத்தியம் என்ற செய்தி வெளியான நிலையில் தற்போது அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளது 
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய 2018 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தின் விளைவாக அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா?  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்