அதனால் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அம்மா உணவகங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், டெங்கு நோய் வராமல் தப்பிப்பது எப்படி?, டெங்குவின் அறிகுறிகள் என்ன? என்பது போன்ற அட்டவணைகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், பூச்சிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து தமிழக அரசு இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த அக்டோபர் 9ம் தேதி வரை 40 பேர் பலியாகியுள்ளனர் எனவும் 11 ஆயிரத்து 744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடபப்ட்டுள்ளது.
அதேபோல் கடந்த நடப்பாண்டில் சிக்கனி குனியா நோயால் 85 பேரும், மலேரியாவால் 8524 பேரும், ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 64 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெறிநாய் கடித்து 13 பேர் பலியாகியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.