மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

Prasanth Karthick

வெள்ளி, 23 மே 2025 (12:15 IST)

தமிழக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக 20 லட்சம் மடிக்கணினிகளுக்கான டெண்டரை எல்காட் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் 2011ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானபோது பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டத்தால் ஏராளமான மாணவர்கள் கணினி அறிவு பெற்றனர். இந்த திட்டம் 2019ம் ஆண்டில் முழுவதுமாக நின்று போனது.

 

இந்நிலையில் தற்போது திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தரமான மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது 20 லட்சம் மடிக்கணினிகள் தயாரிப்பதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

இந்த மடிக்கணினி 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்எஸ்டி, 14 இன்ச் திரை உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்