இந்த நிலையில் மனைவியை அழைத்துக்கொண்டு துபாய் சென்ற இர்பான் அங்கு உள்ள ஒரு ஸ்கேன் சென்டரில் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொண்டார். அதனை அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்ட பார்ட்டியில் கூறிய நிலையில் அது குறித்த வீடியோவையும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இந்தியாவைப் பொறுத்தவரை குழந்தையின் பாலினத்தை பிறக்கும் முன்பு அறிந்து கொள்வது சட்டவிரவாதம் என்ற நிலையில் இந்திய சட்டத்தை மீறி அவர் நடந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் அவர் துபாயில் உள்ள ஸ்கேன் சென்டரில் தான் ஸ்கேன் எடுத்தார் என்பதால் அவர் மீது நடவடிக்கை பாயுமா என்ற சந்தேகமும் இருந்தது.
இந்த நிலையில் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளத்தில் அறிவித்ததற்காக இர்பான் மீது நடவடிக்கை எடுக்க தமிழக மருத்துவ துறை திட்டமிட்டுள்ளதாகவும் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு மருத்துவத்துறை பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.