குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டி வி தொடங்கும் புதிய நிகழ்ச்சி… ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

vinoth

ஞாயிறு, 12 மே 2024 (16:57 IST)
சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் டாப்பு குக் டூப் குக் என்ற சமையல் சம்மந்தப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியில் உருவாக உள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தழுவலாக உருவாக இருக்கிறது.

குக் வித் கோமாளியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்தான் இந்த நிகழ்ச்சிக்கும் நடுவராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான கவனத்தை ஈர்ப்பதற்காக வடிவேலுவை இதில் அங்கமாக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 19 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்