விவசாயிகளின் அழுகுறல் கேட்கவில்லையா? மோடி அரசை துவம்சம் செய்த கமல்ஹாசன்

வெள்ளி, 30 நவம்பர் 2018 (16:09 IST)
கஜா புயல் குறித்து தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் வேகமெல்லாம் பத்தாது என நடிகர் கமல்ஹாசன் காட்டமாக பேசியுள்ளார்.
சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. அந்த மாவட்ட விவசாயிகள் கிட்டதட்ட 10 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் வாழ்வாதாரங்களான தென்னை, பனை, வாழை, சவுக்கு, மா, பலா மரங்களை பறிகொடுத்து வாழ வழியின்றி நிற்கதியாய் தவிக்கின்றனர். பல்வேறு இடங்களுக்கு மக்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினாலும் சில இடங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் உதவிகள் போய் சேராமல் உள்ளது.
 
ஏற்கனவே கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தார் கமல்ஹாசன்.
 
இந்நிலையில் இன்று மீண்டும் கஜா புயல் பாதித்த மக்களை பார்வையிட சென்ற கமல்ஹாசன், இங்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. திரும்பும் இடமெல்லாம் விவசாயிகளின் அழுகுறல் கேட்கிறது. கோடிக்கணக்கான மரங்கள் அழிந்துள்ளன.
 
தமிழக அரசின் இந்த வேகம் பத்தாது. மக்களை மீட்டெடுக்க அரசு அசுர வேகத்தில் செயல்பட வேண்டும். மத்திய அரசு இந்த கஜா புயலை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. விவசாயிகளின் வலி அவர்களுக்கு புரியவில்லை. மத்திய அரசு இதனை பேரிடராக அறிவிக்க வேண்டும். நாட்டின் பிரதமர் இன்னும் மக்களை வந்து சந்திக்காதது வேதனையை அளிக்கிறது.
 
இந்த நேரத்தில் அரசியல் பார்க்காமல், அனைவரும் சேர்ந்து நமக்கு சோறுபோடும் விவசாய பெருமக்களை மீட்டெடுக்க வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்