இதுகுறித்து சி.வி சண்முகம் கூறியுள்ளதாவது:
மேகதாதுவிவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கர்நாடக அரசு முதலில் கூறியிருந்தது. இந்நிலையில் தீடீரென ஒப்புதல்பெற்றுவிட்டு அணைகட்ட ஏற்பாடு செய்து வருவது தமிழக அரசை வஞ்சிக்கும் செயலாகும். மேலும், மேகதாது விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணையம் தனது அதிகாரத்தை மீறியுள்ளது.