தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம் வாபஸ்

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2017 (15:29 IST)
ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் 6 நாட்களாக நடைப்பெற்று வந்த மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


 

 
இலங்கை கடற்படையினரால ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ சுற்றுக்கொள்ளப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் பிரிட்ஜோவின் உடலுடன் போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசு சார்பில் இங்கு வெளியுறவுத்துறை அமைச்சர் வரவேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வந்தனர்.
 
தமிழக அரசியல் பலரும் சென்று போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வந்தனர். நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் போரட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
இதையடுத்து மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனை மீனவர் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருளானந்தம் அறிவித்துள்ளார். மேலும் பிரிட்ஜோவின் உடல் நாளை நல்லடக்கம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்