தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்களை படித்து வருகின்றனர். இதனால் மாணவர்களால் அதிகமான பாடங்களை படிக்க இயலாது என்பதால் 1 முதல் 9 வகுப்பு வரையிலான பாடங்களில் 40 சதவீதமும், 10,11,12ம் வகுப்புகளுக்கு குறிப்பிட்ட சில பாடங்களும் குறைக்கப்பட்டன.
இந்நிலையில் பள்ளி திறப்பது மேலும் தாமதமாகி வருவதால் பாடத்திட்டங்களை மேலும் குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி 1 முதல் 9 வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் 50 சதவீதத்தை குறைக்க முடிவெடுத்திருப்பதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்த அனுமதியை முதல்வரிடம் பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.