ஒரே நாளில் சென்னையில் ரூ.2.48 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் !

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (09:22 IST)
நேற்று ஒரே நாளில் சென்னையில் ரூ.2.48 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பரிசுபொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சட்டசபை தேர்தலையொட்டி போலீசார் தனியாகவும், பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்தும் தினமும் வாகன சோதனை செய்து வருகின்றனர். 
 
இவர்கள் வாகனத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றிக் எடுத்து செல்லும் ரொக்கப்பணம் மற்றும் தங்கம் போன்ற பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். அந்த வகையில், நேற்று ஒரே நாளில் சென்னையில் ரூ.2.48 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்