டெங்குவை கட்டுப்படுத்த ரூ.256 கோடி: மத்திய அரசிடம் கேட்கும் தமிழக அரசு

வெள்ளி, 13 அக்டோபர் 2017 (12:45 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் தலைவிரித்தாடி வருகின்றது. தினமும் ஐந்து முதல் பத்து பேர் வரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்து வருகின்றனர். டெங்குவை கட்டுப்படுத்த மாநில அரசும் தனியார் அமைப்புகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.



 
 
இந்த நிலையில் நேற்று துணை முதல்வர் ஓபிஎஸ், பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து டெங்குவை கட்டுப்படுத்த மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது
 
இதனையடுத்து டெங்கு ஒழிப்பு பணிக்கான மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. இந்த குழுவிடம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ரூ.256 கோடி வழங்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையை கேட்டுக்கொண்ட குழுவினர் விரைவில் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கவுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்