சென்னையில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் 10 சதவீத பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம் என்றும், ஐடி நிறுவனங்களின் ஊழியர்களுக்கான வாகன சேவையை அந்தந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள் அதிகபட்சம் 10 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அவசிய தேவை இல்லாமல் ஊழியர் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ஊழியர்கள் அனைவரும் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்றும், தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.