முழு முடக்கத்தை நீட்டிக்கும் மேலும் சில மாவட்டங்கள்: தமிழகம் முழுவதும் நீளுமா?

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (14:21 IST)
தமிழகத்தின் கொரோனா பரவும் முக்கியமான மாநகராட்சி பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில மாவட்டங்கள் முழு ஊரடங்கு அறிவித்துள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 நாட்கள் முழு ஊரடங்கும், சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு உள்ளதாக திருவாரூர் மாவட்டத்திலும் முழு ஊரடங்கு நாளை செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் சில மாவட்டங்களும் முழு ஊரடங்கை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்