கனமழை அறிவிப்பு; திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (15:19 IST)
நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு திருவாரூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தொடர்ந்து வேறு சில மாவட்டங்களிலும் பள்ளி விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்