திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா: கொடியேற்றம் தேதி அறிவிப்பு..!

செவ்வாய், 14 நவம்பர் 2023 (08:00 IST)
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

 நவம்பர் 17ஆம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றம் நடைபெறும் என்றும் அதனை தொடர்ந்து பத்து நாட்கள் தீபம் திருவிழா நடைபெறும் என்றும் நவம்பர் 23ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\

 நவம்பர் 26 ஆம் தேதி விழாவில் நிறைவு நாளன்று பரணி தீபம் ஏற்றப்படும் என்றும்  அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் என்றும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திருவிழாவை முன்னிட்டு  அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள வருவதாகவும் போக்குவரத்து வசதி, கழிப்பறை வசதி, பாதுகாப்பு வசதி ஆகியவை செய்யப்பட இருப்பதாகவும் பக்தர்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திட  அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்