நச்சுத்தன்மையற்ற நுண்ணுயிர் கழிவு - அமைச்சருக்கு சத்யபாமா எம்பி வேண்டுகோள்

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (16:24 IST)
ஜவுளி சாயக் கழிவுகளிலிருந்து உருவாகும் நுண்ணுயிர் கழிவுகளை, எரிபொருளாகவோ, விவசாயத்திற்கு உரமாகவோ பயன்படுத்த அனுமதி கேட்டு, திருப்பூர் எம்பி சத்தியபாமா இன்று, சுற்றுச்சூழற் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனைச் சந்தித்தார்.



அமைச்சரிடம் அவர் அளித்துள்ள கடிதத்தில்,

தொழில்நுட்பம் வளர்ந்ததற்குப் பிறகு, ஜவுளி சாயக் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சி முறையில் உபயோகமான நன்னீராகவும் (99%) மீதமுள்ள 1% திட்டக்கழிவு என்னும் மட்டி 3 வகையாய் பிரிக்கப் பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், திட்டக்கழிவு என்னும் மட்டி 3 வகையாய் பிரிக்கப் பட்டு,

1) ரசாயனக்கழிவு - சிமெண்ட் ஆலைகளில் மூலப்பொருளாகவும்,

2) இரண்டாம் வகை கழிவான கலப்பு உப்பு - மறு உபயோகத்திற்காக ஆய்வில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்,

3) இன்னொரு வகை திடக்கழிவான நுண்ணியிர் கழிவில் -ரசாயனங்களோ அல்லது கேடு விளைவிக்கும் எந்த பொருட்களுமோ இல்லை என ஈரோட்டில் உள்ள ஏவ் கேர் என்ற ஆராய்ச்சி நிறுவன சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த நுண்ணுயிர் கழிவானது, விவசாயத்திற்கு இடுபொருளாகவும், எரிசக்தி திறன் அதிகம் இருப்பதால், நீராவி உலைகளில் விறகிற்குப் பதில் எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும் என சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் அளித்துள்ள சான்றையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஏற்கனவே, இது குறித்து உரிய சான்றுகளுடன் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருப்பதாகவும்,   ஆகவே, இந்த நுண்ணியிர்கழிவை, விவசாயத்திற்கோ, அல்லது எரிபொருளாகவோ பயன்படுத்தி, பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்புத் திட்டத்தை மேம்படுத்த அனுமதி அளிக்குமாறு, அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சத்தியபாமா எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்