புலம்பல் தினகரன்: அலம்பல் துக்ளக்!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (10:13 IST)
நீண்ட நெடுங்காலமாய் அரசியல் நிகழ்வுகளை கார்ட்டூன் மூலம் விமர்சித்து வரும் துக்ளக் பத்திரிகை, அதன் ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் சோவின் மறைவிற்கு பின்னரும் துனிச்சலுடன் அரசியல்வாதிகள் மீதும், அரசியல் கட்சிகள் மீதும் தனது விமர்சனத்தை வைத்து வருகிறது.


 
 
தற்போது இணையதளங்களில் கலக்கலாக வரும் மீம்ஸ்களின் முன்னோடி துக்ளக்கின் கார்ட்டூன் விமர்சனம் தான். தற்போது ஒரு சின்ன நிகழ்வாக இருந்தாலும் அதனை மீம்ஸ் போட்டு விமர்சித்து கலாய்த்து தள்ளுகிறது இளைய தலைமுறை. ஆனால் இதனை பல ஆண்டுகளுக்கு முன்னரே செய்து வருகிறது துக்ளக் பத்திரிக்கை.
 
இந்நிலையில் தமிழக அரசியலில் விஸ்வரூபம் எடுக்க முயற்சித்த டிடிவி தினகரன் தற்போது பல்வேறு சிக்கலில் மாட்டி அதில் இருந்து எப்படி மீண்டு வருவது என தெரியாமல் புலம்பிக்கொண்டு இருப்பதை துக்ளக் பத்திரிக்கை விமர்சித்துள்ளது.
 
ஜெயலலிதா இறந்ததும், ஓபிஎஸ் முதல்வரானார். ஆனால் ஓபிஎஸ்ஸை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு முதல்வராக ஆசப்பட்டார் சசிகலா. சசிகலா சிறைக்கு சென்றதும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். ஆனால் துணைப் பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவால் பெற்ற தினகரன் எப்படியாவது முதல்வராக வேண்டும் என முயற்சித்தார்.
 
ஆனால் எல்லாவற்றையும் இழந்து, தனது முதல்வர் கனவை தொலைத்த டிடிவி தினகரன் புலம்புவதை திருவிளையாடல் புதிய காப்பி என கார்ட்டூன் மூலம் விமர்சித்துள்ளது துக்ளக்.
அடுத்த கட்டுரையில்